பதவியை இழப்பாரா விஜயதாச ? 

பதவியை இழப்பாரா விஜயதாச ? 

நீதியமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக நாளை (24) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுள்ளது.   

இதன்போது, அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக இருந்து கொண்டே, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டதன் ஊடாக, விஜயதாச ராஜபக்ஷ, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி யாப்பை மீறி இருப்பதாகக் கூறப்படுகிறது.  

அதன் அடிப்படையில் அவரது கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவர் தமது பாராளுமன்ற உறுப்புரிமையையும் இழக்க நேரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )