பாலியல் பொம்மைகளை பேச வைக்கும் முயற்சியில் சீனா
அறிவியலின் சமீபத்திய பிரசவமான AI தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
பலதரப்பட்ட நன்மைகளை AI தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தையும் AI தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த AI தொழில்நுட்பம் உலகின் உள்ள அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாகியுள்ளது. அவ்வகையில் செக்ஸ் பொம்மைகள் துறையிலும் பெரும் மாற்றத்தை AI தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.
செக்ஸ் பொம்மைகளை பேச வைக்கவும் பயன்படுத்துவர்களிடம் உரையாடுவதற்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சீன விஞ்ஞானிகள் chatGPT மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செக்ஸ் ரோபோட்களை பேச வைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். அவ்வகையில் பயனாளர்களிடம் பேசவும் உடல்ரீதியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் வடிவிலான இந்த செக்ஸ் பொம்மைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.