பறவைக் காய்ச்சல் தொடர்பில் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

பறவைக் காய்ச்சல் தொடர்பில் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

இந்தியா போன்ற அயல் நாடுகளில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இலங்கையை விழிப்புடன் இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ப்ளுவன்சா (avian influenza) என்பது ஒரு வகை வைரஸ் தொற்று நோயாகும்.

இது முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது, அத்தோடு மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பறவைக் காய்ச்சலின் மிகவும் பொதுவான வடிவமாக H5N1 உள்ளது.

H5N1 என்பது வைரஸ்/இன்ப்ளுவன்சா ஆகும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்குகளுடன் மனிதர்கள் தொடர்புகளை பேணினால் இந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கும்.

சமீபத்தில் இந்தியாவில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா என்கிற ‘A’ வகை வைரஸால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.

மனிதர்களுக்கு வைரஸ் பரவியமை தொடர்பில் கண்டறியப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் மே மாதம் அவுஸ்திரேலியாவில் முதன் முதலில் மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் பரவியமை கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )