தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணியத் தடை

தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணியத் தடை

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை மற்றும் முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இலங்கை மதிப்பில் 10 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு 9 இலட்சமும் மத தலைவர்களுக்கு 10 இலட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தஜிகிஸ்தான் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு இஸ்லாமிய உடை மற்றும் மேற்கத்திய பாணி மினி ஸ்கர்ட் இரண்டையும் மாணவர்களுக்கு தடை விதித்தது .

கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )