சர்வதேச யோகா தினம் இன்று
உலக யோகா தினம் என்றும் அழைக்கப்படக்கூடிய சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் திகதி அன்று அனுசரிக்கப்படுகிறது.
யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், யோகா பயிற்சி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வலியுறுத்தலின் பெயரில் ஐக்கிய நாடுகள் அவை 2014 ஆம் ஆண்டில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
யோகாவை பயிற்சி செய்வதால் நம் உடல், மனது மற்றும் ஆன்மாவிற்கு கிடைக்கும் பலன்களை இந்த நாள் எடுத்துரைக்கிறது. வயது வித்தியாசம் பாராமல் எல்லா வயதினரும், பல்வேறு உடல் கட்டமைப்பை கொண்ட நபர்களும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்பதை சர்வதேச யோகா தினம் ஊக்குவிக்கிறது.