தசையுண்ணி பக்டீரியாவால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
ஜப்பானில் பரவி வரும் ‘தசையுண்ணி பக்டீரியாக்கள்’ காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையிலும் பரவும் சாத்தியங்கள் உள்ளனவா என்று பாராளுமன்றில் இன்று (20) கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதில் வழங்கிய சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, தசையுண்ணி பக்டீரியாவானது ஜப்பானில் பரவி வருகின்ற போதும், அதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இது வைரஸ் போன்று கட்டுப்படுத்த முடியாத ஒன்று அல்ல எனவும் சிகிச்சை முறைமைகள் ஊடாக இதனைக் கட்டுப்படுத்தலாம். அதனால் இது பெருந்தொற்றாக மாறக்கூடிய ஆபத்து இல்லை” என தெரிவித்துள்ளார்.