இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இங்கிலாந்து அணி வெற்றி !
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 42ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இங்கிலாந்து அணி 08 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்றைய தினம் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பதிவுசெய்தது.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஜான்சன் சார்லஸ் (Johnson Charles) 38 ஓட்டங்களையும் ரோவ்மேன் பவல் (Rovman Powell) 36 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 36 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.
பந்துவீச்சில் மொயின் அலி (Moeen Ali) , லியாம் லிவிங்ஸ்டோன் (Liam Livingstone) மற்றும் அடில் ரஷித் (Adil Rashid) தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர் .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 181 ஓட்டங்களை பதிவுசெய்தது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் , பில் சால்ட் (Phil Salt) 87 ஓட்டங்களையும் ஜானி பேர்ஸ்டோவ் (Jonny Bairstow) 48 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் (Jos Buttler)
25 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.
பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் (Roston Chase) மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் (Andre Russell) லா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர் .