ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் ; மூவர் கைது

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் ; மூவர் கைது

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நேற்று (18) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அச்சுவேலி, பகுதியை சேர்ந்த  ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை (13) அதிகாலை  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , நேற்று  (18)  அன்று அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்டவர்களை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )