குளிர்ந்த நீரை விரும்பி குடிப்பவரா ?
சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுடு தண்ணீரா குடிக்க முடியும். குளிரான தண்ணீர்தான் சரி என்ற நினைப்பில், தோன்றும் பொழுதெல்லாம் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து குளிர் நீரை அருந்துவோம்.
ஆனால், அடிக்கடி குளிர்ந்த நீரைக் குடிப்பது உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
குறிப்பாக இதய நோயாளிகள் குளிரான நீரை குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரணம், குளிர்ந்த நீர் இதயத் துடிப்பை அதிகப்படுத்தி சில சமயங்களில் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரை அருந்துவதே சிறந்தது என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுவும் உணவு உண்டதன் பின்னர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதே நல்லது. இது உணவை எளிதாக ஜீரணமடையச் செய்யும்.
இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால், தாகம் எடுக்கும் வரையில் காத்திருக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. தண்ணீர் எந்தளவுக்கு குடிக்கிறோமோ அந்தளவுக்கு நம் உடலுக்கு நல்லது.