வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (18) பதிவாகியுள்ளது.

பண்டாரவளையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிச் சென்று பஸ்ஸின் பின் சக்கரத்தில் சாரதி சிக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )