நீர் விநியோகிக்கும் குழாயில் மோதிய கார் : ஹோமாகம  உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை !

நீர் விநியோகிக்கும் குழாயில் மோதிய கார் : ஹோமாகம உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை !

கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் குழாய் ஒன்றில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை மற்றும் மத்தேகொட ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி குழாயில் மோதியதில் இவ்வாறு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

நீர் குழாயில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் நீர் வெளியேறி வீணாகி வருவதுடன் குறித்த இடத்தில் உள்ள மின்கம்பமும் உடைந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் சிக்கிய கார் சாரதி உட்பட இருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கார் அதிவேகமாக வந்து வீதியை விட்டு விலகி தண்ணீர் குழாயில் மோதி கவிழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த நீர் குழாயில் ஏற்பட்ட பாரிய சேதம் காரணமாக கொழும்புக்கான நீர் விநியோகம் தாமதமாகலாம் என நீர் வழங்கல் சபையின் மஹரகம வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )