தென்சீன கடலில் ஆதிக்கம் செலுத்த புதிய சட்டம் அமுல்

தென்சீன கடலில் ஆதிக்கம் செலுத்த புதிய சட்டம் அமுல்

தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அந்த கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா அமைத்துள்ளது.

இதற்கு பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள் அத்துமீறி நுழைவதாக கூறி சீனா அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந் நிலையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, சீனக் கடலோரக் காவல்படையினர் எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் நிர்வாகத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் வெளி நாட்டவர்களைத் தடுத்து வைக்க முடியும். 60 நாட்கள் வரை காவலில் வைக்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும் சீனாவின் பிராந்திய கடல் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டுக் கப்பல்கள் தடுத்து வைக்கப்படலாம் என்று விதிகளில் குறிப்பிட்டு உள்ளது.

இதற்கு பிலிப்பைன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன கடலோர காவல் படையின் நடவடிக்கைகள் காட்டு மிராண்டித்தனமானது, மனிதாபிமானமற்றது என பிலிப்பைன்ஸ் விமர்சித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )