72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை

72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை

பாகிஸ்தான் நாட்டில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. எனினும், முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

சமீபத்தில்  12 வயது சிறுமியின் தந்தை ஆலம் சையது என்பவர், 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவரிடம் அந்நாட்டு மதிப்பின்படி, ரூ.5 லட்சம் பணம் பெற்று கொண்டு மகளை விற்றுள்ளார்.

அந்த முதியவர், சிறுமியை திருமணம் செய்ய முயன்றபோது, தகவலறிந்து வந்த பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தி முதியவரை கைது செய்துள்ளனர். எனினும், சிறுமியின் தந்தை சம்பவ பகுதியில் இருந்து தப்பியோடி விட்டார்.

இந்த விவகாரத்தில், 72 வயது முதியவர் மற்றும் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைக்க முயன்ற நபர் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )