பிரபல கோல் கீப்பர் மதிஜா சார்கிக் திடீரென உயிரிழப்பு
மொண்டெனேகுரோ தேசிய கால்பந்து அணியின் பிரபல கோல் கீப்பராக இருந்த மதிஜா சார்கிக் (Matija Sarkic) நேற்று (15) உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை மொண்டெனேகுரோ கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இவர் இங்கிலாந்தின் மில்வோல் கால்பந்து அணியின் கோல் கீப்பராகவும் செயற்பட்டுள்ளார். 26 வயதான மதிஜா சார்கிக் (Matija Sarkic) இறுதியாக கடந்த ஜூன் 5 ஆம் திகதி பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் தனது தேசிய அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News