ஸ்காட்லாந்தை கடைசி ஓவரில் வீழ்த்திய அவுஸ்திரேலியா  !

ஸ்காட்லாந்தை கடைசி ஓவரில் வீழ்த்திய அவுஸ்திரேலியா  !

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 35ஆவது போட்டியில் ஸ்காட்லாந்து அணியை அவுஸ்திரேலியா அணி 05 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்று டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் (Daren Sammy Cricket Ground) நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சூழ்ச்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பதிவுசெய்தது.

துடுப்பாட்டத்தில் ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராண்டன் மெக்முல்லன் (Brandon McMullen) 60 ஓட்டங்களையும்
ரிச்சி பெரிங்டன் (Richie Berrington) 42 ஓட்டங்களையும் ஜார்ஜ் முன்சி (George Munsey) 35 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwel) இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 181 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 19.4 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் டிராவிஸ் ஹெட்
( Travis Head) 68 ஓட்டங்களையும் மார்கஸ் ஸ்டோனிஸ் (Marcus Stoinis) 59 ஓட்டங்களையும் டிம் டேவிட் (Tim David)
24 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்து வீச்சில் மார்க் வாட் (Mark Watt) மற்றும் சஃப்யான் ஷெரீப் (Safyaan Sharif) தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )