ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்கா இன்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க 85.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்போது, புதிய போட்டி சாதனையுடன் புதிய இலங்கை சாதனையையும் ருமேஷ் தரங்க படைத்துள்ளார்.

இதேவேளை, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நதிஷா தில்ஹானி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் 57.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெற்றி பெற்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )