ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் !

ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் !

நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பப்படிவங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பப்படிவம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் https://applications.doenets.lk/intro என்ற இணையத் தளத்தில் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் நேற்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி காலை 9.00 மணியுடன் நிறைவடையும் எனவும் இதற்கான பரீட்சை 2024, ஓகஸ்ட் மாதத்தில் நடாத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )