உடன்படிக்கையை இலங்கை தொடர்ச்சியாக பேணுவது அவசியம் !

உடன்படிக்கையை இலங்கை தொடர்ச்சியாக பேணுவது அவசியம் !

இலங்கை ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கையை தொடர்ச்சியாக பேணுவது அவசியமென IMF வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

செயற்றிட்ட இலக்குகளை அடைவதற்கான அவதானிப்புகள் மற்றும் மாற்று முன்மொழிவுகள் குறித்து அறிய தாம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவை சாத்தியமானவையாகவும் செயற்றிட்ட காலப்பகுதிக்குள் அடையக்கூடியவையாகவும் காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையை முன்கொண்டு செல்ல போதுமான முன்னேற்றம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் இலங்கை அதிகாரிகள் ஆரம்ப வரைபடத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, 2024 மூன்றாம் காலாண்டில் பொதுப்போக்குவரத்து மற்றும் சிறப்பு தேவைக்கான வாகனங்களை இறக்குமதி செய்யவும், 2025 ஆம் ஆண்டளவில் மோட்டார் வாகனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )