நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
நேபாளத்தில் கடந்த திங்கட்கிழமை பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. தப்லேஜங் மாவட்டம் பக்டாங்லங் ஊரக நகராட்சி பகுதியில் நேற்று (13) இடைவிடாமல் மழை பெய்த நிலையில், நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் 2 வீடுகள் புதைந்தன
இதில் ஒரு வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு மகள்களும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்று (14) மீட்கப்பட்டன. அந்த குடும்பத்தினரின் சுமார் 50 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழிகளும் நிலச்சரிவில் சிக்கி இறந்துவிட்டன. மற்றொரு வீட்டில் இருந்தவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் ஒவ்வெரு ஆண்டும் பருவமழை காலத்தில் மழையால் பேரழிவுகள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் மக்கள் பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.