அமித் ஷா – செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பு
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.கவின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் இன்று (13) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அண்மையில் நடந்துமுடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு செந்தில் தொண்டமான் இதன்போது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார். பொருளாதார அபிவிருத்தி தொடர்பான இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka