பணிப்புறக்கணிப்பில் அஞ்சல் ஊழியர்கள்
ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12) நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இன்று (13) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிப்பதே இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறையையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.