தாங்க முடியாத கழுத்து வலியா ?
மனித உடலில் 206 எலும்புகள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தசைகளின் சரியான எண்ணிக்கை என்ன என்பது நமக்கு தெரியாது. உடலில் தசைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. நமது கைகள், கால்கள், கழுத்து போன்றவை தானாக இயங்க இவை மிகவும் முக்கியம்.
உடலில் மிக வலிமையான பகுதி கழுத்து பகுதியாகும். கழுத்து என்பது 7 சிறு சிறு டிஸ்க்குகளால் ஆனது. இந்த டிஸ்குகளுக்கு இடையில் ஒரு திரவம் படர்ந்திருக்கும். கழுத்தில் உள்ள தசைகள் மிகவும் முக்கியமானது.
இவற்றை கொண்டுதான் நமது தலையை திருப்பவும், ஆட்டவும் முடியும். இந்த தசைகள் தலை உயர்த்தி பிடிப்பதோடு மட்டும் இல்லாமல், மூளையின் இரத்த ஓட்டத்திற்கும், சுவாசத்திற்கும் உதவி புரிகிறது.
ஆகவே கழுத்து தசைகளை வலிமையாகவும், சிரம படுத்தாமலும் வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக வயது செல்ல செல்ல அதிகம் பாதிக்க படுவது கழுத்து தசைகள் தான். தாங்க முடியாத கழுந்து வலியை அனுபவிக்க நேரிட்டால் சில இயற்கை உணவு பொருட்கள் மருந்தாக மாறும்.
பூண்டு
கழுத்து தசைகளில் உண்டாகும் வீக்கத்தை குறைக்க பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் . இது ஒரு இயற்கை தீர்வாகும். பூண்டு எண்ணையை கழுத்து பகுதியில் தடவுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
பூண்டு எண்ணெய்யை சூடாக்கி, கழுத்து பகுதியில் தடவுவதால் வலி குறையும். தினமும் காலையில் 2-3 பூண்டு பற்களை கடித்து மென்று விழுங்கிவிட்டு 1 ஸ்பூன் தேனை பருகலாம்.
பூண்டு எண்ணெய்யுடன் சேர்த்து தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் தடவலாம்.
ஒத்தடம்
கழுத்து வலி ஏற்படும்போது, அதனை குறைக்க வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் ஒத்தடம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.
கழுத்து பகுதியில், வெந்நீரையும் குளிர்ந்த நீரையும் மாற்றி மாற்றி ஒத்தடம் கொடுக்கும்போது, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
இதனால் கழுத்து பகுதியில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் ஆகின்றன.
கழுத்தில் வீக்கம் அல்லது சிவப்பு நிறமாக தோன்றும்போதும் இதனை முயற்சிக்கலாம். ஒத்தடம் தருவதால் வலி குறையும்.