கொழும்பிற்கு விநியோகிக்கப்படும் நீர் தொடர்பான அறிவித்தல்

கொழும்பிற்கு விநியோகிக்கப்படும் நீர் தொடர்பான அறிவித்தல்

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முறையான சுத்திகரிப்பு நடவடிக்கையின் பின்னரே மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாக அதன் உதவி பொது மேலாளர் ஏ.பி.ஆர்.ஜே. விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இலங்கை தரநிலையில், எந்த விதமான நோய்க்கிருமிகளும் இல்லை எனவும், வெள்ளத்தில் எந்த தண்ணீர் வந்தாலும் அதற்குரிய துப்புரவு பணிகளை செய்து தரமான குடிநீரை தேசிய நீர் வழங்கல் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது எனவே வீண் அச்சத்தை தவிர்க்குமாறும்” தெரிவித்துள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )