நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்கள் மூடப்படும்
இன்று (12) நள்ளிரவு முதல் 13ம் திகதி நள்ளிரவு வரை சுகயீன விடுமுறை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகயீன தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ,2000 ஊழியர் வெற்றிடம் காணப்படுவதால் நான்கு வருடங்களாக பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லையென ஒன்றிணைந்த தபால் தொழிற்ச்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இதனால் ஊழியர்கள் பாரிய வேலைப்பளுவிற்கு உள்ளாகியுள்ளனர். வெற்றிடம் காரணமாக மக்களுக்கான சேவைகளை சரிவர நிறைவேற்றுவதிலும் அசௌகரியம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.