ஏலியன் உருவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினம்
உலகில் முதல் உயிர் என்பது முதலில் கடலில் தோன்றியதாக கருதப்படுகிறது. பூமியின் 71 சதவீத இடத்தை ஆக்கிரமித்திருக்கும் நீர் பலட்சக் கணக்கான வித்தியாச வித்தியாசமான உயிரினங்களின் இருப்பிடமாக உள்ளது. ஆழ்கடலுக்குள் ஒளிந்திருக்கும் எண்ணிலடங்கா அதிசயங்கள் நம்மை வகையில் அவ்வபோது கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.
புதிதாக கண்டுபிடிக்கப்படும் விநோதமான உயிரினங்கள் மனிதன் இயற்கையை குறித்து அறிந்தது சொற்பமே என்று புலப்படுத்துகிறது. தற்போது பசிபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினம் மனிதர்களால் வர்ணிக்கப்படும் ஏலியன் போன்ற தோற்றத்தில் உள்ளது அறிவியல் உலகில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
மெக்சிகோவிற்கும் ஹவாய் தீவிற்கும் இடைப்ப பசிபிக் கடல் பிரதேசத்தில் இதற்கு முன் யாரும் பார்த்திராத இந்த வினோத உயிரினம் வாழ்கிறது. கடலின் 11,480 முதல் 18,045 அடியாழத்தில் அபிசோபெலாஜிக் என்று அழைக்கப்படும் கடல் மட்டத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த உயிரினமானது கண்ணாடியின் தன்மையுடைய கடல் குக்கும்பர் என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இதற்கு ‘Unicumber’ என்று பெயர் சூட்டபட்டுள்ளது . இந்த உயிரினம் மிகப்பெரிய உடல் அமைப்பை கொண்டுள்ளது. கடலின் தரைமட்டத்தில் உள்ள இயற்க்கைக் குப்பைகளை உண்டு இவை உயிர்வாழ்கின்றன. அதாவது இவை கடலின் வேக்கும் கிளீனர் போல் செயல்படுகின்றன. இதுமட்டுமின்றி கடல் பன்றி என்று குறிப்பிடப்படும் ஒரு உயிரினமும் அப்பகுதியில் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றைக் குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர்கள், பசிபிக் கடல் பிரதேசத்தின் அடியாழத்தில் வாழும் 10 இல் 9 உயிரினங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளன என்று தெரிவிக்கின்றனர்.