கர்ப்பிணிகளுக்கு நடாத்தப்படும் வளைகாப்பு

கர்ப்பிணிகளுக்கு நடாத்தப்படும் வளைகாப்பு

கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்பகாலத்தில் 7அல்லது 9ஆவது மாத முடிவில், வளைகாப்பு நடத்தப்படுவது வழக்கம். இது அவர்களது கர்ப்பகாலத்தில் முக்கியமான ஒரு சடங்காக கருதப்படுகிறது.

வளைகாப்பு என்பது பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டி கர்ப்பிணியை ஆசீர்வாதம் செய்யும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இது கர்ப்பிணிப்பெண்ணை மகிழ்விப்பதற்கான ஒரு சடங்கும் கூட. இந்த வளைகாப்பு தினத்தில் குறித்த கர்ப்பிணிப்பெண் ஒரு ராணியைப் போல பார்க்கப்படுவாள்.

அவளுக்கு பிடித்த உணவுகள், நகைகள், புடவைகள் என அனைத்து பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு வளைகாப்பு மகத்துவம் மற்றும் ஆடம்பரத்துடன் நடாத்தப்படுகிறது.

இந்த வளைகாப்பில் செய்யப்படும் விருந்து வரப்போகும் குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டது. இந்த நேரத்தில் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு சுற்றியிருக்கும் அனைத்து சத்தங்களும் கேட்கும்.

வளைகாப்பின்போது தாயின் கைகளில் அணிவிக்கப்படும் வளையல்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த வளையல்களுக்குப் பின்னாலும் ஒரு கதை உண்டு. வளையல்கள் அணிவிக்கப்படும்போது கர்ப்பிணிப் பெண் எங்கு செல்கிறாள்? என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )