பிரதமராக நாளை பதவியேற்கிறார் மோடி : கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தி ஆட்சியைத் தொடர வேண்டிய நெருக்கடியில் பா.ஜ.க!

பிரதமராக நாளை பதவியேற்கிறார் மோடி : கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தி ஆட்சியைத் தொடர வேண்டிய நெருக்கடியில் பா.ஜ.க!

டெல்லியில் நாளை (09) ஆம் திகதி மாலை நரேந்திர
மோடி இந்தியாவின் மூன்றாவது முறையாக பிரதமராக
பதவியேற்க உள்ளார்.

இன்று பிரதமர் மோடி பதவியேற்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இவ்விழா
ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவியேற்பு விழாவில் தெற்காசியத் தலைவர்கள் பலர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் பா.ஜ.க 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பா.ஜ.கவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால், கூட்டணி பலத்துடன் பா.ஜ.க ஆட்சிஅமைக்கிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக்
கூட்டம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

புதியஅமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17- ஆவது மக்களவையை கலைக்க பரிந்துரைத்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி
வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை
சந்தித்த மோடி, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17- ஆவது மக்களவையை கலைப்பதற்கான அமைச்சரவை கூட்டத்தின் பரிந்துரையையும் குடியரசுத்தலைவரிடம் வழங்கினார்.

இந் நிலையில், பிரதமர் மோடி பதவியேற்பு விழா நாளை (09) மாலை
நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி 03 ஆவது முறையாக பதவிஏற்பதன் மூலம், தொடர்ந்து 03 முறை இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செசெய்யும் பெருமையை பெற்றுள்ளார்.

இந்தத் தேர்தல் முடிவுகள், மோடியின் தனிப்பட்ட செல்வாக்கைக் குறைத்திருப் பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும்
நிலையில், “பாஜக மொத்தமாக வென்ற இடங்களைவிட எதிர்க்கட்சிகள் குறைவாகத் தான் வென்றிருக்கின்றன” எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார் மோடி.

மாமனாரின் (என்.டி.ராமராவ்) முதுகில் குத்தியவர் என முன்பு சந்திரபாபு நாயுடுவைப் பகிரங்கமாக விமர்சித்த மோடி, இந்தத் தேர்த
லிலும் – தேர்தல் முடிவுக்குப் பின்னரும் அவ ருடன் நட்பு பாராட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )