இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் :  இந்தியாவிற்கு முதல் வெற்றி !

இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் : இந்தியாவிற்கு முதல் வெற்றி !

இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் இந்திய அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 12.2 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )