சஜித் – அநுர விவாதம் நாளை

சஜித் – அநுர விவாதம் நாளை

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சல்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி உரையாடலை நேரடியாக ஒளிபரப்புவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருப்பதாக சுயாதீன தொலைகாட்சி அலைவரிசை (ITN) இரு தரப்பினருக்கும் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவர் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன இரு தரப்பினருக்கும் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

21-03-2024 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் பொது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பரிந்துரைத்தார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பகல் நேர செய்தி ஒலிபரப்பு மற்றும் பிரதான செய்தி ஒலிபரப்பிலும் இந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது. அதன்போது, ​​சுயாதீன தொலைக்காட்சி சேவையானது இவ்வாறான விவாதத்தை ஏற்பாடு செய்து ஒளிபரப்புவதற்கு தயாராக இருப்பதாகவும் அதே செய்தி ஒளிபரப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 21-03-2024 அன்று நேரலையில் ஒளிபரப்பான “துலாவ” கால அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இது போன்ற விவாதத்தை எளிதாக்கத் தயார் என்று சுயாதீன தொலைக்காட்சி தெரிவித்திருந்தது.

2024 ஆம் ஆண்டு ஜூன் 06 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் விவாதத்தை நடத்துவதற்கு கடந்த 02 மாதங்களாக தனது செய்தி ஒளிபரப்புகளில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் அர்ப்பணிப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாக சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் விவாதத்திற்கு ஊடக நிறுவனத்திற்குச் சொந்தமான HD ஸ்டுடியோவில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த விவாதத்தை ஒருங்கிணைப்பதற்காக சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் பிரதிப் பொது முகாமையாளர் (செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள்) சுதர்மன் ரதலியகொட நியமிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் மேலும் கூறுகிறார்.

இரண்டு பேச்சாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட பிரதி, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )