மெக்சிகோ நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் தெரிவு!
மெக்சிகோவின் முன்னாள் மேயரும் ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளருமான கிளாடியா ஷீன்பாம், மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றத் தேர்தலில் கிளாடியா 58 முதல் 60 வீதம் வரையான வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தது.
அதற்கமைய, தேர்தல் நீதிமன்றம் உறுதிசெய்யும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கிளாடியா ஜனாதிபதியாக பதவியேற்பார் என சர்வதேச செய்தி வெளியிட்டுள்ளன