இஸ்ரேலியர்கள் மாலத்தீவில் நுழைய தடை

இஸ்ரேலியர்கள் மாலத்தீவில் நுழைய தடை

தீவு நாடான மாலத்தீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்சு அறிவித்துள்ளார். பலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36,439 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே 27 ஞாயிற்றுக்கிழமை பலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பொதுமக்கள் கொள்ளப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

முன்னதாக பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் அதை தனி நாடாக அங்கீகரித்தன. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் பலஸ்தீனத்தில் மீண்டும் அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளித்து வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் சமயத்தில் போர் நிறுத்தத்த்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு அழைப்பு விடுத்துள்ளளார். இந் நிலையில் தான் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாலத்தீவு இஸ்ரேல் குடிமகன்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதையும் மீறி இங்குள்ள இஸ்ரேலியர்களுக்கு ஏதேனும் அசமபாவித்தம் நிகழ்ந்தால் அவர்களுக்கு அரசு உதவி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசானது மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனே நாடு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலாவுக்கு பெயர் போன மாலத்தீவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சூழலில் இந்த அறிவிப்பானது அதன் பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது. இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனை தீவிரமாக நடந்து வந்த 1990 களில் மாலத்தீவில் இஸ்ரேலியர்களுக்கு தடைவிதிக்கபப்ட்டு, பின் 2010 இல் அதனை நீக்கி இஸ்ரேலுடன் அரசாங்க உறவுகளை மீண்டும் மாலத்தீவு புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )