அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை ?
சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றும், நாளையும் (04) மூட தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று மாத்திரம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாளை (04) பாடசாலை மீள ஆரம்பிக்கப்படுமா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடிய பின்னர் இன்று பிற்பகல் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka