10 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த, கிரியெல்ல, நிவித்திகல, கலவானை மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் மத்துகமை, புளத்சிங்கள, பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கும், கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.