சினோபெக் எரிபொருள் விலையிலும் திருத்தம்!
நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 355 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு 314 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் (ரூ.420) மற்றும் சுப்பர் டீசல் (ரூ.377) ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் இல்லை.