கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை
2022ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில், 128 சதவீதமாக இருந்த கடன் சுமையை 2032ஆம் ஆண்டிற்குள் 95 சதவீதமாகக் குறைப்பதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், 2022ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த பண விநியோகம் 34.6 சதவீதமாகக் காணப்பட்டது. அதனை எதிர்வரும் 2032ஆம் ஆண்டிற்குள் 13 சசதவீதமாகக் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka