பெண்கள் பெயரில் காணி உரிமை பத்திரம்
காணி உரிமை பத்திரம் பெண்கள் பெயரில் வழங்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (29) ஆறுமுகன் தொண்டமானின் 60 ஆவது ஜனனதின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “காணி உரிமைகளை வழங்கினால் ஒவ்வரு குடும்பத்திற்கு ஒரு அடையாளம் கிடைக்கும் நாம் மலையகத்திற்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ளன இம் மாதம் 29 ஆம் திகதி காணி உரிமை வழங்கபடுமென கூறினோம் சீர்ரற்ற காலநிலை காரணமாக அதனை நாம் நிறுத்தி வைத்துள்ளோம்.
இ.தொ.கா.வை பொருத்த வரையில் ஆண்களும் பெண்களும் சமம் ஆகையால் காணி பத்திரம் என்பது பெண்கள் பெயரிலும் வழங்கபடும்” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka