சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு

சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு

இலங்கையில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாளை (31) அனுஷ்டிக்கப்படவுள்ள உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 சதவீதத்தால் குறைந்துள்ளதுடன், இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாகக் குறைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் சிகரெட் உற்பத்தி 19 சதவீதம் குறைந்துள்ளது. உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கை முன்னேற்றமடைந்தாலும், சுமார் 1.5 மில்லியன் மக்கள் இன்னும் சிகரெட் பாவனையில் ஈடுபடுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )