பெண்களை விட ஆண்கள் முன்கூட்டியே இறப்பது எதனால் ?
இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், பெரும்பாலும் இறப்பில் பாலின ஏற்றத்தாழ்வுகளை நிச்சயம் காணக்கூடியதாக இருக்கும். அதாவது, பெண்களை விட ஆண்கள் முன்கூட்டியே இறந்திருப்பார்கள். இது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினையாக இருக்கிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில் ஜெர்மனியில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 78 வருடங்களுக்கும் மேல் இருந்தது. பெண்களின் ஆயுட்காலம் 82.8 வருடங்களாக இருந்தது.
அதேசமயம் 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண்களின் ஆயுட்காலம் 79ஆக இருந்த அதேநேரம் ஆண்களின் ஆயுட்காலம் 73ஆக இருந்தது.
இதற்கு கொவிட் – 19 தொற்றுதான் மிகப் பெரிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்களின் முன்கூட்டிய இறப்புக்கு இன்னும் சில காரணங்களும் உண்டு. அவற்றில் பெண்களை விடவும் ஆண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆண்கள் இதயநோயினால் பாதிக்கப்படுவது அதிகம்.
மேலும் ஆண்களின் இறப்புக்கு புற்றுநோயும் பிரதான காரணமாக உள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை போன்றவற்றை ஆண்கள் உபயோகிப்பது அதிகம். எனவே இதுகுறித்து ஆண்கள் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்.