மரக்கறி, மீன்களின் விலை அதிகரிப்பு

மரக்கறி, மீன்களின் விலை அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பெய்து வரும் மழையால் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ற வகையில் அறுவடை இல்லாததால், காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கிராம் போஞ்சி ரூ.480, முருங்கை காய் ரூ.720, கேரட் ரூ.240, மிளகாய் ரூ.440, பீட்ரூட் ரூ.400, தக்காளி ரூ.240, பச்சை மிளகாய் ரூ.400, புடலங்காய் ரூ.320, பூசணி ரூ.160, கத்தரிக்காய் ரூ.240, முட்டைகோஸ் ரூ.240, வெண்டைக்காய் ரூ.400, மரவள்ளி கிழங்கு ரூ.200 என விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை உயர்வால் நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், இந்நாட்களில் மீன் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாததனால் மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக மன்றத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )