கொழும்பில் 59 மரங்கள் முறிவு
பலத்த காற்று காரணமாக கடந்த 20ஆம் திகதி முதல் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள், வீதிகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்களே இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளன.
இதேவேளை கொழும்பில் வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் மூடப்பட்டிருந்த பல வீதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
சேர் லெஸ்டர்ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தியில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான வீதியும், பொரளை கனத்த சுற்றுவட்டத்திலிருந்து தும்முல்லை சுற்றுவட்டம் வரையான வீதியும் நேற்றிரவு மூடப்பட்டிருந்தன.
அதேநேரம் மரங்களுக்குக் கீழாக வாகனங்களை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு கொழும்பு மாநகர சபை சாரதிகளை அறிவுறுத்தியுள்ளது.
CATEGORIES Sri Lanka