குஜராத்தில் தீ விபத்து – 24 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் தீ விபத்து – 24 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் விடுமுறை நாளான நேற்று (25) சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியிருந்தனர்.

இந்நிலையில், அந்த கேளிக்கை அரங்கில் நேற்று மாலை தீடிர் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 12 சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அவர்களிடம் பேசினேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் என்னிடம் கூறினார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவி செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக் கெள்கிறேன். மேலும், குஜராத் அரசு இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் விரைவான நீதியை வழங்கவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )