10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, கங்கவட்ட கோரளை, உடதும்பர, யட்டிநுவர, உடபலாத்த, பாதஹேவாஹெட்ட, உடநுவர, பாத்ததும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாத்தளை மாவட்டத்தின் உக்குவலை, யட்டவத்தை, ரத்தோட்டை, வில்கமுவ, அம்பன்கங்கை கோரளை, லக்கல பல்லேகம, நாவுல மற்றும் மாத்தளை பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.