உலகில் மிக இளம் வயதில் ஓவியரான சிறுவன்
கானா நாட்டை சேர்ந்த (Ghana) ஏஸ்-லியாம் நானா சாம் அன்க்ரா (Ace-Liam Nana Sam Angra) என்ற சிறுவன் உலகின் இளம் வயது ஓவியராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வயதான இவர் பல ஓவியங்கள் வரைந்துள்ளார்.
அவற்றில் 9 ஓவியங்கள் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறுகையில்,
ஓவியங்கள் வரைவதில் ஏஸ் லியாமுக்கு இருந்த ஆர்வம் அவன் 6 மாத குழந்தையாக இருந்த போதே வெளிப்பட்டது.
அவன் நடக்க கற்றுக்கொண்டிருக்கும் போது நான் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
எனவே அவனது பொழுதுபோக்கிற்காக பேப்பர் ஒன்றை தரையில் விரித்து ஓவியம் வரைய கற்றுக்கொடுத்தேன்.
காலப்போக்கில் அவனுக்கு ஓவியம் வரைவது பிடித்துப்போனது.
தொடர்ந்து பல ஓவியங்கள் வரைந்தான்.
சமீபத்தில் ஏஸ் லியாம் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன.
அதில் 10 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதில் 9 ஓவியங்கள் விற்றுத்தீர்ந்தது ‘ என அவர் தெரிவித்துள்ளார்.