விளக்கு ஏற்றும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

விளக்கு ஏற்றும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

பித்தளை அல்லது வெள்ளி, வெண்கலத்தால் ஆன விளக்கே பூஜை செய்யச் சிறந்தது.மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும். தலைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்தும் பூஜிக்கலாம்.

திருவிளக்கை விபூதி, குங்குமம், சந்தனம் இவற்றால் பொட்டிட்டு அலங்கரிக்கவும், விளக்கின் உச்சிப் பகுதியில் ஒரு பொட்டு, அதற்குக் கீழே மூன்றும், அதனடியில் இரண்டும், கீழ்ப்பகுதியில் இரண்டு பொட்டு என மொத்தம் எட்டு பொட்டுக்கள் வைக்க வேண்டும்.

உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள்.

அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும்.

விளக்கில் நிறைய எண்ணெய் ஊற்ற வேண்டும். இடையிடையே எண்ணெய் ஊற்றக்கூடாது.

இரு திரிகள் இட்டு ஐந்து முகங்களிலும் ஏற்ற வேண்டும்.

பூச்சரத்தையோ அல்லது மாங்கல்யச் சரட்டையோ விளக்கின் தண்டுப் பகுதியில் சுற்றலாம்.

விளக்கு பூஜை செய்கின்ற விளக்கின் சுடரிலிருந்து ஊது வத்தி, கற்பூரம் இவற்றை ஏற்றக்கூடாது.

திருவிளக்கிலே தேவியே உறைகின்றாள். விளக்கை வழிபடுவதன் மூலம் தேவியை ஆராதனை செய்கின்றோம்.

அகிலத்தைக் காத்தருள் புரியும் அன்னையின் அருளைப் பெற திருவிளக்கு பூஜை எளிமையானது.

திருவிளக்கை அணைக்கும்பொழுது ஒரு துளிபாலை ஜோதியில் வைத்து அல்லது திரியை மெல்ல உட்புறம் இழுத்தோ அணைக்கலாம்.

குத்துவிளக்கு பூஜையை, சுமங்கலிப் பெண்களும் கன்னியரும் கூடி கோவில்களில் செய்தால் வீடும் நாடும் சுபிட்சமடையும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )