பிரான்ஸில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்
பிரான்ஸின் Provence-Alpes-Côte-d’Azur பிராந்தியத்தில் காலநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை மிகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளிவிபரவியல் மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்கான பிரெஞ்சு தேசிய நிறுவனம் ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 1976 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2021 மற்றும் 2050 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரான்ஸின் பிரதான நிலப்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், வெப்பமண்டல இரவுகளால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
1976 முதல் 2005 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் வெப்பமண்டல இரவுகளால் பிரான்ஸின் சனத்தொகையில் சுமார் 35 வீதமானவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த தொகை தற்போது 79 வீதமாக அதிகரிக்குமென குறித்தக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.