பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

அரசமைப்பு விவகாரத்தைவிடவும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘மக்கள் பிரதிநிதி, மக்கள் மற்றும் தேர்தல் தொகுதிக்கு பொறுப்பக்கூறக்கூடிய வகையில் தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும். செனட் சபை உருவாக்கப்பட வேண்டும். இவ்விரு விடயங்களை செய்வதற்குரிய அரசமைப்பு மறுசீரமைப்பு யோசனையை நான் முன்வைத்துள்ளேன்.

இதனை செய்யாவிடின், புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புதிய அரசமைப்புக்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தேவை.

அது தொடர்பில் மக்களுக்கு யோசனைகளை முன்வைப்பதற்கு மேலும் ஒரு ஆண்டு தேவை. பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துக்கு அப்பால் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.

புதிய அரசமைப்பு இயற்றப்படும் என அரசாங்கம் கூறி இருந்தாலும் எந்த கொள்கையின் அடிப்படையில் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தற்போதும் அமுலில் உள்ளது. இதற்கு புதிதாக சட்டம் இயற்ற வேண்டியதில்லை. அரசமைப்பு மறுசீரமைப்பைவிடவும் பொருளாதாரம் பற்றி தற்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் பாராளுமன்றத்தை நடத்துவதுகூட சிக்கலாகமாறும்.” என தெரிவித்துள்ளார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )