மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவெவ பிரதேசத்தில் நேற்று (21) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இவ்வாறு உயிரிழந்தவர் வெலியார, செவனகல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka