மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி
மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் (20) உயிரிழந்துள்ளதாக வனஜீவித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் ஒன்றரை ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் சட்ட விரோதமாக மின்சாரத்தை பெற்று பாதுகாப்பு வேலி அமைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவசாயச் செய்கையை அழிப்பதற்காக காட்டு யானைக் கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் (20) அதிகாலை அக்காணியினுள் புகுந்து விவசாயச் செய்கையை சாப்பிட்டு நாசம் செய்து விட்டு வெளியேற முற்பட்டவேளையில் காட்டு யானை ஒன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வனஜீவித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
உயிரிழந்துள்ள காட்டு யானை சுமார் 6 அடியைக் கொண்டதும் 20 முதல் 25 வயது மதிக்கதக்கதும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.