சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க்
பொதுவாக பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
அந்த வகையில் சருமத்துக்கு மிகவும் பயன் அளிக்கும் சார்க்கோல் ஃபேஸ் ஃபெக் பற்றி பார்ப்போம்.
சருமத்தில் இருக்கும் துகள்களினால் எளிதாக எண்ணெய் பசை, வெடிப்பு போன்றவை உருவாகும். அதற்கு இந்த சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அதிகமான வியர்வை, திறந்த புண், அழுக்குப் படிதல் போன்றவற்றினால் சருமத்தில் அழுக்குகள் தேங்கி நிற்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சார்கோல் மாஸ்க் பலன் அளிக்கும்.
சருமத்தில் ஏற்படும் தொற்று மற்றும் முகப்பரு போன்றவற்றை குறைக்க உதவும்.
இறந்த சரும செல்களை சுத்தப்படுத்த உதவுகிறது.
எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு சருமத்திலுள்ள எண்ணெயை நீக்கி ஈரப் பதத்தை சமநிலையில் பராமரிக்க உதவும்.
இதனை கற்றாழையுடன் சேர்த்து முகத்தில் பயன்படுத்தினாலும் நச்சுக்கள் நீங்கி நீண்ட காலத்துக்கு முகம் சீரான பிரகாசத்தையும் கொடுக்கும்.