வெசாக் பண்டிகை
மே மாத பௌர்ணமி நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை வெசாக் (Vesak) ஆகும்.
பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்டாட்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.
- சித்தார்த்த கௌதமர் லும்பினி (நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.
2.புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.
3. பரிநிர்வாணம் அடைந்த நாள்.
இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணைநாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். “வெசாக்” என்பது தமிழ் சொல் அல்ல. ஆனால் இலங்கையர்களும் வெசாக் என்றே அழைக்கின்றனர்.
“வெசாக்” தினத்தை சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் முதன்முறையாக இலங்கையில் விடுமுறை நாளாக அறிவித்திருந்தார். மேலும், இந்த தினத்தை லக்ஷமன் கதிர்காமர் அவர்கள் சர்வதேச கொண்டாட்ட தினமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.